Others
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மது விற்ற பெண் கைது…

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொத்துக்காடு பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக அரியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த மணியாள் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்