fbpx
RETamil News

மார்ச் மாதம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மேலும் உடல் நல குறைவு ஏற்பட்டு காலமானார்.இதையடுத்து காலமான ஜெயலலிதா அவர்களின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா அவர்களின் சமாதியின் பணிகள் ரூ.50 கோடி செலவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. அதற்கு பிறகு அதாவது மார்ச் மாதம் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close