Others

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் த.வெ.க நன்றி…

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.,மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வாயிலாக, மக்கள் மனத்தில் த.வெ.க.,வுக்கென இருக்கும் முதலிடம், மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், ‘திருமங்கலம் பார்முலா, ஈரோடு கிழக்கு பார்முலா’ என, எந்த பார்முலாவும் இல்லாமல், ஜனநாயகம் காக்கும் பார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது.தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை; அன்புமிக்க துாயசக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. பேரங்கள் நடந்ததாக அவதுாறு பேசிய, மிருக குணபேச்சுக்கு, தகுந்த பதிலடியை, தரமாக மக்கள் தந்துள்ளனர்.  இரண்டு நாட்கள்நான், பிரசாரம் செய்ததை நக்கலாக பேசியவர்களுக்கு தான், மக்கள் பதிலடி தந்துள்ளனர். சட்டசபை தேர்தலிலும், தமிழகம் முழுதும் இதுபோல் பிரசாரம் செய்ய, தி.மு.க., அனுமதித்து இருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் ஓட்டளித்து வெற்றி பெற செய்துள்ள அனைவருக்கும், அவர்களது குடும்பத்தில் ஒருவனாக, நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் – வி.சி.க., – ம.தி.மு.க., – முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி.இது முழுக்க முழுக்க பெண்கள் மீதான அவதுாறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிராக மக்கள் அளித்த வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி. இது இனிமேலும் தொடரும்; இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close