Others
டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை …
காந்திஜெயந்தியையொட்டி, டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்மலர்தூவிமரியாதைசெலுத்தினார்.காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ”ஒரு சிறந்த சமூகத்தை நோக்கியும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைவதற்கும் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதிதிரவுபதிமுர்முவெளியிட்டுள்ள பதிவில், ”காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 157வதுபிறந்தநாளில்,அனைத்துக்குடிமக்கள்சார்பாகவும்அவருக்குஎனதுமரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.