குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் விதிமீறல்…?
குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் விற்பனையை அதிகரிக்கும் வகையிலான பிரசாரங்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளில் கட்டுப்பாடுகள் உள்ளன. இதன்படி, குழந்தைகளுக்கான உணவு பொருட்களின் விளம்பர நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.நெஸ்லே இந்தியா’ நிறுவனத்தின், ‘நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1’, ‘லாக்டோஜென் புரோ 1’ மற்றும் ‘பாலோ அப் பார்முலா’ ஆகிய மூன்று பால் பவுடர்களை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வு செய்தது. இப்பொருட்களின் விளம்பரங்களும் ஆய்வு செய்யப்பட்டன.நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1′ பொருளின் விளம்பரத்தில் ‘5 எச்.எம்.ஓ.,க்கள்’ மற்றும் ‘வெய் புரோட்டீன்’ தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ‘5 எச்.எம்.ஓ.,க்கள்’ என்பது குழந்தைகளுக்கான உணவில் இடம்பெறும் தாய்பாலில் உள்ள சர்க்கரை சேர்க்கை தொடர்பான குறிப்பு; ‘வெய் புரோட்டீன்’ என்பது பாலில் உள்ள ஒரு புரதக் கூறாகும்.இந்த சேர்க்கை குறித்து நெஸ்லே இந்தியாவிடம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விளக்கம் கேட்டது. இந்த விளம்பர தகவல்கள், குழந்தைகளுக்கான உணவு விதிமுறைகளுக்குஎதிரானவைஎனஎப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,தெரிவித்துள்ளது.அதேபோல்,’லாக்டோஜென்புரோ1’பால்பவுடர்விளம்பரத்தில்,’வெய்புரோட்டீன்’எளிதில்செரிமானமாகும்எனகுறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கும்நெஸ்லேநிறுவனத்திடம்விளக்கம்கேட்கப்பட்டுள்ளது.இணை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட நெஸ்லேவின் ‘பாலோ அப் பார்முலா’
பவுடர் ஒன்று ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில்பயோட்டின்எனப்படும்’வைட்டமின்பி7’சத்தின்அளவுநிர்ணயிக்கப்பட்டஅளவுக்குஏற்பஇல்லைஎன கண்டறியப்பட்டது. மறுசோதனையிலும் இதுஉறுதி நெஸ்லேநிறுவனம்விதிமீறல்…செய்யப்பட்டது.இந்தமூன்றுபொருட்கள் தொடர்பாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனத்துக்கு எதிராக தனித்தனியாக மூன்று வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளதாகஎப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. இதில், இரண்டு வழக்குகள் விளம்பர தகவல்கள் தொடர்பானவை. மற்றொரு வழக்கு பயோட்டின் அளவு தொடர்பான ஆய்வக பரிசோதனை முடிவை அடிப்படையாக கொண்டது.