Others
புழலேரி உபரி நீர் — கால்வாய் வழியாக இன்று காலை திறந்து விடப்பட்டது..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழலேரி பலத்த மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வருவதால் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் உபரி நீர் கால்வாய் வழியாக இன்று காலை திறந்து விடப்பட்டது.
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்எஸ். சுதர்சனம் முன்னிலையில் திறக்கப்பட்டது முன்னதாக தண்ணீர் போகும் கால்வாய் வழிகளான நாரவாரி குப்பம், கிராண்ட் லயன், வடகரை ஊராட்சி பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..