fbpx
Others

த.வா.க–திமுக கூட்டணியில் இருந்துவிலகினார்..

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன் அறிவிப்பு
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. திமுக தரப்பு தொடர்ந்து 1 தாெகுதி மட்டுமே தர வலியுறுத்தியதால், அவர் திமுக கூட்டணியில் இருந்து விலகினார். இதுதொடர்பாக,22/3/26 கோயம்பேட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக அரசு மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன், எங்களது கோரிக்கைகளுக்கு திமுக குழு செவிசாய்க்கவில்லை.அனைத்து மக்களுக்கான சமூக நீதி கிடைக்கவில்லை. திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் இத்தனை காலம் இருந்தேன். அதற்கான வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்று முதல் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறது. இவ்வாறு அவர்கூறினார்.மேலும், கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக-வுடன் கூட்டணியா? தவெக-வுடன் கூட்டணியா? அல்லது இந்த தேர்தலில் தனித்து களமிறங்கலாமா?என்றும் வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.தனது அரசியல் வாழ்க்கையை பாமக-வில் தொடங்கி, நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றார். பின்னர், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்து வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் பன்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வானார்.இந்த தேர்தலில் 3 தொகுதிகள் இல்லாவிட்டாலும் 2 தொகுதிகளையாவது ஒதுக்குமாறு வேல்முருகன் கோரிக்கை விடுத்தார். ஆனால், கடந்த முறையைக் காட்டிலும்இந்தமுறைதிமுககூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகள் இடம்பிடித்திருப்பதால் தொகுதி பங்கீடு இந்த முறை திமுக-விற்கு சவாலாக மாறியது.கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த சில மாதங்களாக அச்சுறுத்தி வந்த காங்கிரசைத் தக்கவைப்பதற்காக அவர்களுக்கு கடந்த முறையைக் காட்டிலும் 3 தொகுதிகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தேமுதிக-வும் அதிக தொகுதிகளை வலியுறுத்தி வருவதால் கூட்டணியில் இடம்பிடித்துள்ள மற்ற கட்சியினருக்கான தொகுதிகள் பங்கீட்டை குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. தற்போது வரையிலான தொகுதிபங்கீட்டைப்பார்த்தாலே இது தெரியும். இன்னும் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ளவிசிக,தேமுதிக,மக்கள்நீதிமய்யம்,மார்க்சிஸ்ட்ஆகியகட்சிகளுக்குஇன்னும்தொகுதிகள்ஒதுக்கப்படவில்லை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close