விஜய்யின் தவெகவுடன் கூட்டணிக்கு வருவது யாரு….? — நாஞ்சில் சம்பத்..
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இதுவரை எந்த பக்கம் என முடிவு செய்யாமல் இருந்த தேமுதிகவை திமுக தட்டிதூக்கியுள்ளது. எப்படியாவது இந்த முறை ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுக அதற்கான
வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.அதேபோல் இந்த முறை திமுகவை தோல்வியடைய வைத்து எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று அதிமுக – பாஜக கூட்டணியும் வியூகம் வகுத்து வருகிறது.மாபெரும்இருஜாம்பவான்களுக்கு இடையே புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறார். வாக்கு வங்கியை நிரூபிக்காவிட்டாலும் தவெக திமுக இடையே தான் போட்டி, தவெகவெற்றிநிச்சயம்..எனசொல்லி வருகிறார்.கட்சி தொடங்கிய முதல் கூட்டத்தின்போதே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனவெளிப்படையாகவே சொல்லிவிட்டார் விஜய். ஆனால் கட்சி ஆரம்பித்தப்போது தான் யாரும் டிவிகே-உடன் இணையவில்லை என்றால், தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் இருக்கும் சூழலிலும் விஜய்யுடன் யாரும் இணையவில்லை.ஒரு பக்கம் அதிமுக பாஜகவும், இன்னொரு பக்கம் திமுக – காங்கிரசும் பலமாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், விஜய்யுடன் யாரும் கூட்டணி அமைக்காதது அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்பதையே எழுப்புவதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். தற்போதுஅரசியல்களத்தில்தனித்துவிடப்பட்டுள்ளதுவிஜய்யின் தவெக. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே அந்த கட்சியில் இணைந்த முக்கிய நபராக பார்க்கப்படுகிறது.தற்போது தேமுதிகவும் விஜய்யை கண்டுகொள்ளாமல் திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணியை முடித்துவிட்டதால் இனி விஜய்யின் பக்கம் யாரும் சேரமாட்டார்கள் என்றேசொல்லப்படுகிறது. இந்த நிலையில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், விஜய்யின் தவெகவுடன் ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் கூட்டணிக்கு வர உள்ளது என்று கூறியுள்ளார். நாஞ்சில் சம்பத் கூறியதாவது:- ‘தவெகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு தேசிய கட்சியும் வரும்.. ஒரு மாநில கட்சியும் வரும்..” என்று கூறினார். நாஞ்சில் சம்பத் கூறிய அந்த தேசிய கட்சி காங்கிரசாக இருக்குமோ என்றும், மாநில கட்சி திருமாவளவனின்விடுதலைசிறுத்தைகள்கட்சியாகஇருக்குமோஎனவும்அரசியல்வட்டாரத்தில்கேள்விஎழுந்துள்ளது. ஏனென்றால் திமுக காங்கிரஸ் கட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாலும்,தேமுதிகவைகூட்டணிக்குதிமுகசேர்த்துஇருப்பதாலும் இவ்வாறு பேசப்படுகிறது. ஆனால் அதற்கு சான்ஸே இல்லை என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.இந்தியா கூட்டணியில் திமுக மிகப்பெரிய பங்களிப்பு அளித்து வருவதால் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியில் வர வாய்ப்பே இல்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டதால் அவரும் விஜய் பக்கம் செல்ல மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். விஜய் தனித்து விடப்படுள்ளாரா? இல்லையா? என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரிந்துவிடும்.