தவெக-விற்கு விசில் சின்னம் ஒதுக்கி இன்று தேர்தல் ஆணையம் உத்தரவு…..

சட்டமன்றதேர்தலுக்காக தயாராகும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம். திமுக-வின் உதயசூரியன் சின்னம், அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து களமிறங்கும் விஜய்யின் தவெக-விற்கு என்ன சின்னம்? என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தவெக-விற்குவிசில்சின்னம்ஒதுக்கிஇன்றுதேர்தல்ஆணையம்உத்தரவுபிறப்பித்துள்ளது.தவெகவிற்குவிசில்சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளநிலையில்,இணையத்தில்விஜய்ரசிகர்களும்,தவெகதொண்டர்களும்,நிர்வாகிகளும்விசில்சின்னத்திற்குஆதரவானவீடியோக்களைபதிவிட்டுதங்கள்பரப்புரையைதொடங்கியுள்ளனர். திரைப்படங்களில் உள்ள விசில் காட்சிகள் அனைத்தையும் எடிட் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள்கேப்டன்தோனிவிசில்அடிக்கும்வீடியோவைபதிவிட்டுதனதுஆதரவைஎக்ஸ்தளவாசிஒருவர்பதிவிட்டுள்ளார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் வருமான வரி அலுவலகத்தில் முன்பு அமர்ந்து வில்லனை விசில் அடித்தே மிரட்டும் காட்சி வைரலாகி வருகிறது.