Others

இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தமிழக அரசியல் களத்தில் பல ஆச்சர்யங்கள்….?

BREAKING | பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை சந்திதார் முதலமைச்சர் விஜய்  #SunNews | #PMK | #Anbumani | #Vijayமதுராந்தகம்,தாராபுரம்தொகுதிகளுக்குநடக்கும்இடைத்தேர்தல் தவெக – திமுக – அதிமுக என மூன்று கட்சிகளுக்கு இடையிலான கடுமையான போட்டிக் களமாக மாறியுள்ளது. மேலும், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், இடதுசாரிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.இந்த இடைத்தேர்தலில் சில முக்கிய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை தனித்து சந்தித்த தவெக, இம்முறை மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.கடந்த தேர்தல் வரை பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து வந்த திமுக, இப்போது கிட்டத்திட்ட தனித்து தேர்தலை சந்திக்கிறது. ஏனெனில் அக்கூட்டணியில் இப்போது தேமுதிகவும், சில சிறிய கட்சிகளும் மட்டுமே அங்கம் வகிக்கின்றன.அதிமுக கூட்டணியிலும் பாஜக மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிமுக – பாஜகவோடு பல ஆண்டுகளாக நட்புறவோடு இருந்த ஜி.கே.வாசனும் இந்த தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து விட்டார். கட்சிகளின் எண்ணிக்கை கணக்கின் அடிப்படையில் இப்போதைய சூழலில், தவெக கூட்டணியே பலமானது.2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சியமைத்த பின்னர் கூட்டணிக் கணக்குகள் தலைகீழாக மாறின. ஆனாலும், இப்போதைக்கு எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் உள்ளன என்பது தெளிவாகிவிட்டது. இருப்பினும், பாமக மட்டும் கூட்டணி விவகாரத்தில் யாருக்கும் பிடிகொடுக்காமலேயே இருந்து வருகிறது.தவெக ஆட்சியமைக்க தடுமாறியபோது பாமகவின் ஆதரவை நாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக அணியில் உள்ள கட்சிகளை சேர்க்க மாட்டோம் என்ற முடிவை விஜய் எடுத்தார். அதேபோல பாமக இருக்கும் கூட்டணியில் விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ் இடம்பெறுமா என்றும் தவெக தரப்பு யோசித்தது. எனவேதான் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என அன்புமணி சந்திப்பை தவிர்த்த முதல்வர் விஜய்அப்போது பாமகவின் ஆதரவை விஜய் கோரவில்லை.பாமகவின் ஆதரவை நாடாமல் இருந்தாலும், முதல்வராக பதவியேற்ற பின்னர் விஜய் அன்புமணியை அவரின் வீட்டில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளில் முதல்வர் விஜய் நேரில் சென்று சந்தித்தது அன்புமணியை மட்டும்தான்.அதேபோல தவெக அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து பல கோரிக்கைகளை அன்புமணி முன்வைத்தார். முக்கியமாக ஆளுநர் உரையிலேயே பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பு சர்வே நடத்தப்படும் என தவெக அரசு அறிவித்தது. இதனை மனமுவந்து அன்புமணி பாராட்டியிருந்தார்.சட்டப்பேரவையிலும் சவுமியா அன்புமணியில் பேச்சுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தவெக அமைச்சர்களும் அவரின் கோரிக்கைகளை பாசிட்டிவாக அணுகினர். இதன் காரணமாக தவெக அணியில் ஒருவேளை பாமக இணையுமோ என்ற பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல, தவெக அரசு எடுத்த பல்வேறு முடிவுகளையும் அவ்வப்போது கண்டித்து, விமர்சனம் செய்துவந்தார் அன்புமணி.இந்தச் சூழலில்தான், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தடாலடியாக அறிவித்தார் அன்புமணி. மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் பதவி விலகி தவெகவில் இணைந்த நேரத்தில், அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த அன்புமணி அந்த தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிக்க வேண்டும் என பேசியிருந்தார். ஆனால், இப்போது அதற்கு மாறான முடிவை அவர் எடுத்துள்ளார்.மதுராந்தகத்தில் பாமகவுக்கு பெருமளவில் செல்வாக்கு உள்ளது. கடந்த 2021, 2026 தேர்தல்களில் அந்த தொகுதியில் அதிமுக வெல்ல பாமகவே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இப்போது பாமகயாருக்கும்ஆதரவில்லை என அறிவித்துவிட்டதால், அக்கட்சியினரின் வாக்கு யாருக்கு செல்லும் என்ற கேள்வி Anbumani Ramadoss: தவெகவில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்.. இதுவா உங்க தூய  அரசியல்? - விஜயை விளாசிய அன்புமணி! | PMK Anbumani Ramadoss Slams CM Joseph  Vijay regarding 3 AIADMK MLAs Switch to TVKஎழுந்துள்ளது.அதிமுகவுக்கு பாமக ஆதரவளிக்காததை முன்வைத்து, அக்கட்சி தவெக கூட்டணியில் இணையலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஏனெனில் இப்போது இடதுசாரிகள் பிடிகொடுக்காமல்தான் தவெகவை ஆதரிக்கிறார்கள். முக்கியமாக, இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவதாக எடுத்த முடிவை தவெக சுத்தமாக ரசிக்கவில்லை.விசிகவும் தவெக அரசின் பல முடிவுகளை அவ்வப்போது ‘சுட்டிக்காட்டி’ வருகிறார்கள். எனவே, இந்த இரு தொகுதிகளில் வென்றால், பாமகவை உள்ளே கொண்டுவரலாமா என்ற யோசனையை தவெக தீவிரமாக்கி உள்ளது.தவெக – பாமக இடையே மென்மையான போக்கு இருப்பதற்கு முக்கிய இணைப்பு பாலமாக தவெகவின் தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். இவர் அன்புமணியின் நட்பு வட்டத்திலும் உள்ளார்.பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவது ஆட்சிக்கு பலமாக மாறுவது ஒருபுறம் இருந்தாலும், வடமாவட்டங்களில் எதிர்வரும் தேர்தல்களின் வெற்றிக்கும் கைகொடுக்கும் என நினைக்கிறது தவெக. ஆனால், பாமக உள்ளே வந்தால், விசிக அந்த இடத்தில் இருக்குமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில், கூட்டணி விஷயத்தில் சில பரீட்சார்த்த முடிவுகளை எடுக்க கணக்குப் போடுகிறது தவெக. தங்கள் முடிவுகளுக்கு தடை போடாமல், ஆட்சிக்கு முழு ஆதரவை வழங்கும் கூட்டாளிகள் தேவை என முதல்வர் விஜய் நினைப்பதாக சொல்லப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close