fbpx
Others

முதல்வர் விஜய் அதிரடி–717 டாஸ்மாக் கடைகள் மூடப்படஉள்ளது…

Vijay TASMAC tvkதமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் கடைகள் அனைத்தையும் ஆய்வு செய்து கட்டாயமாக மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் அடிப்படையில் மொத்தமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வரும் 255 கடைகள் முதல் கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடப்பட உள்ளன. இதற்கான பணிகளை டாஸ்மாக் அதிகாரிகள் அவசரமாக தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர் கடந்த 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை கலாச்சாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விஜய் உறுதி அளித்திருந்தார்.”போதைப்பொருள்மற்றும்மதுகாரணமாககுடும்பங்கள்பாதிக்கப்படக்கூடாது. சட்டம் ஒழுங்கில் சமரசம் இருக்காது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close