fbpx
RETamil Newsஇந்தியா

இனிமே வாழ்க்கையே கொரோனாவோடு தான்…! அரசாங்கமே சொல்லிடுச்சு..!

Health ministry luv agarwal says learn to live with corona virus

டெல்லி: உலகமே கொரோனா மையமாக இருக்கும் நிலையில் நாமும் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது: கொரோனா  இரட்டிப்பாகும் காலம் என்பது முன்பு 12 நாட்களாக இருந்தது.

அது தற்போது குறைந்து 10 நாட்களிலேயே இந்த நிலையினை எட்டுகிறது. பல இடங்களில் கொரோனா பயங்கர வீரியமாக பரவ இதுதான் காரணம். நம் முன்னே பெரிய சவால் காத்திருக்கிறது.

அது கொரோனா வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். வைரஸிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள நம்மிடையே ஒற்றுமை அவசியம். அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close