fbpx
Others

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….

IAS Reshuffleதமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் இன்று 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே ஐஏஎஸ் அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டனர். அந்த வகையில் சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக மாற்றப்பட்டார். திட்ட வளர்ச்சித் துறை செயலாளராக சந்தியா வேணுகோபால் சர்மா, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக ஸ்வர்ணா, தொழில்துறை, முதலீடு ஊக்குவிப்புத் துறை சிறப்பு செயலாளராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளனர். அது போல் அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ், வருவாய், நிர்வாகத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜவுளித் துறை ஆணையராக ஷோபனா, தொழிலாளர் நலத் துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ், மீன்வளத் துறை இயக்குநராக விஜய கார்த்திகேயன், நகர திட்டத் துறை ஆணையராக கிரண்குராலா,சமூகநலத்துறைஇயக்குநர்மகேஸ்வரிரவிக்குமார்ஆகியோர்நியமிக்கப்பட்டனர்.சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநராக ஆஷா அஜீத், நில அளவைத் துறை இயக்குநராக கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close