fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட் 2019 தாக்கல் செய்தார் பியூஷ் கோயல் !

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் 2019:

1. நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி வழங்கப்படும். சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட் மீதான உரையில் பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது.

3. செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி காரணமாக வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

4. இராணுவத்திற்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு 35,000 கோடி நிதி ஒதுக்கீடு. மேலும்
இராணுவத்திற்கு முதல் முறையாக ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. ஹைட்டோ கார்ப்பன் உற்பத்தியை அதிகரித்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடிவு

6. ஜிஎஸ்டி-க்கு பிறகு 14 மாநிலங்களின் வருவாய் அதிகரிப்பு

7. திருட்டு வீசிடி ஓழிக்க புதிய திட்டம்

8. கிராமப்புறங்களை டிஜிட்டல் பகுதிகளாக மாற்றும் வேகம் அதிகரித்துள்ளது

9. மொபைல் இணைய கட்டணம் உலகளியே இந்தியாவில் தான் மிகக் குறைவு.

10. மொபைல் இணைய பயன்பாடு 50 மடங்கு அதிகரித்துள்ளது

11. ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

12. சூரிய மின்சக்தி உற்பத்தி 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிப்பு

13. முத்தரா திட்டத்தில் 7.2 லட்சம் ரூபாய் கோடி வழங்கப்பட்டுள்ளது

14. முத்தரா திட்டம் கீழ் சிறு தொழில் செய்பவர்களுக்கு 1 மணிநேரத்தில் 1 கோடி கடன் வழங்கப்படும்.

15. பிஎஃப் சந்தாரதார்கள் உயிர் இழந்தால் அளிக்கப்பட்டு வந்த 2.5 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை 6 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

16. இந்த ஆண்டு முதல் அமைப்பு சார தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்

17. பணிக்கொடை வரம்பு ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

18. தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது

19.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

20. கிராமப்புற பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் விதமாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

21. நாடோடிகளை அடையாளம் கான தனி குழு அமைக்கப்படும்.

22. தேசிய பென்ஷன் திட்டத்தின் (NPS) அரசு பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு

23. பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு திட்டம் அறிமுகம்

24.தனிநபர் வருமானத்துக்கான வரிக்கழிவுக்கான உச்சவரம்பை ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக பியூஷ் கோயல் அறிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close