மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் இன்றும் நீட்டிப்பு !

மத்திய அரசுக்கு எதிராகவும் மற்றும் சி.பி.ஐ-க்கு எதிராகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இரு மோசடி வழக்குகள் தொடர்பாகவும் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் சிபிஐ யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம் விசாரணை நடத்த நேற்று அவரது வீட்டிற்க்கு சிபிஐ சென்றனர்.
அப்போது போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரின் வீட்டில் காவலுக்கு இருந்த போலீசார் சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் மேற்குவங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக கமிஷனரின் வீட்டிற்கு விரைந்து வந்தார். இவ்வாறு போலீஸ் கமிஷ்னரின் மீது நடவடிக்கை எடுக்க முயலும் மத்திய அரசை கண்டித்து நேற்று இரவு 9 மணி முதல் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். திங்கட்கிழமையான இன்றும் சிறிது நேர இடைவெளிக்கு பிறகும் தனது தர்ணா போராட்டத்தை தொடங்கினரர் மம்தா பானர்ஜி.

இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக மம்தா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் பெருமளவில் கூடிவருகின்றனர். மேலும் மம்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மேற்குவங்கம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.















