Others
சோழவரம் வடக்கு ஒன்றியம் இளைஞரணி–சிறப்பு செய்தி..

திருவள்ளூர்கிழக்கு மாவட்டதி.மு.க இளைஞரணி மற்றும் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி
தச்சூரில் நடைபெற்றது. முன்னதாக மறைந்த முன்னாள் பாரத பிரதமர். மன்மோகன் சிங் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.பின்னர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் போட்டியை தொடங்கி வைத்து அவரும் விளையாடினார்.போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேரம் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். லோகேஷ், அவைத் தலைவர். பகலவன், ஒன்றிய கழகச் செயலாளர். செல்வசேகரன், ஜெகதீசன், கதிரவன், முரளி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.