fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னைக்கு வேண்டும் கண்டிப்பான ஊரடங்கு…! கோர்ட்டில் மனுத்தாக்கல்!

Petition filed in Chennai high court about lock down strictly

சென்னை:

சென்னையில் கண்டிப்பான ஊரடங்கை அமல்படுத்த கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

12,507 பேர் குணமடைந்துள்ள நிலையில் 258 பேர் பலியாகி விட்டனர். சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது.

இந் நிலையில் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுள்ளார். மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close