பொன் மாணிக்கவேல் — சிபிஐ சோதனை எதற்காக?.. எந்த கட்சியிலும் நான் சேர மாட்டேன் .

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்க வேலின் சென்னை பாலவாக்கம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர். 2023ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.அதாவது, இடை நீக்கம் செய்யப்பட்ட சிலை கடத்தல் பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய காதர் பாஷா, பொன் மாணிக்கவேல் பணியின் போது தமக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.இந்தவழக்கில்நீதிமன்றம்சிபிஐவிசாரணைக்குஉத்தரவிட்டதன்அடிப்படையில்,இந்தசோதனையானதுநடைபெற்றுள்ளது.சோதனைக்குப்பின்னர்செய்தியாளர்களிடம்பேசியபொன்மாணிக்கவேல், “சோதனை என்பது சட்டவிரோதம்.என்னிடம்விசாரணைநடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். பழைய அதிகாரியிடம் சமர்பிக்க முடியாத ஆவணங்களை தற்போது வந்துள்ள அதிகாரிகளிடம்சமர்பித்துள்ளேன். அவர்கள்வரும்போதேஉங்கள்நேர்மையைகையெடுத்துகும்பிடுகிறோம் என்று கூறிதான் வந்தனர்.விசாரணையின் போது ஒரு டிஎஸ்பி மீது வழக்கு போட்டேன். அதுதொடர்பாகவே விசாரிக்க வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். நடராஜர் சிலை வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது. அதுதொடர்பாக மதுரையில் ஒரு கொலை நடக்க, அதனை 4 வருடங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை.இதுதொடர்பாக அப்போதைய விசாரணை அதிகாரி ஜீவானந்தம் வெளிநாட்டில் இருந்து ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்து கொண்டுவரவில்லை. நான் தான் சுபாஷ் கபூரை கைது செய்து அழைத்து வந்தேன். இந்த வழக்கில் காதர் பாஷாவை வம்பாக இழுத்துவிட்டேன் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் விசாரித்தனர். ஜீவானந்தம் இதுதொடர்பாக நடத்திய சோதனையின் போது காதர் பாஷாவும் இருந்தார்என்பதுதான் உண்மை. ஆனால்,இல்லைஎனதவறானதகவல்களைகூறியுள்ளார்.என் மீது ஓராயிரம் வழக்குகள் உள்ளன. நான் எந்த அரசியல் கட்சியிலும் இதுவரை இணையவில்லை. சாகும் வரை இணையவும் மாட்டேன். அதற்கான விருப்பமும் எனக்கு இல்லை. என் நேர்மை குறித்து யாரும் எள்ளளவு கூட பேச முடியாது” என்று தெரிவித்தார்.