புழல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
சென்னைக்கு அருகே உள்ள புழல் அருள்மிகு சுப்பிரமணியசாமி ஆலய கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது.
வள்ளி தெய்வானை சமேதஸ்ரீ சுப்பிரமணியசாமி வீற்றிருக்கும் மூலஸ்தான கோபுரம் உள்பட பல்வேறு பரிவார மூர்த்தி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும்பூஜைகள்நடைபெற்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர். பிரியா ராஜன். முன்னாள் அமைச்சர் மூர்த்தி .கோயில் நிர்வாக செயல் அலுவலர். குமரன் அறங்காவலர் குழு தலைவர். ரவி அறங்காவலர்கள் குணசேகரன். லட்சுமி நீதி ராஜன். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர். விஜயன். மாநகராட்சி கவுன்சிலர் .சேட்டு. வழக்கறிஞர் புழல். நாராயணன் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் மற்றும் விழா குழு சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புழல் போலீஸ் உதவி ஆணையர். ஆதிமூலம் இன்ஸ்பெக்டர். மல்லிகா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்