fbpx
RETamil News

மீண்டும் கொரோனா வைரசால் சீனாவில் உயிரிழப்பு தொடங்கியது – இருவர் பலி

சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியைஏற்படுத்தி வருகின்றது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் 99 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 5-ஆம் தேதி 143 பேருக்கு கொரோன தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.அதன்பிறகு 6 வாரங்கள் கழித்து நேற்று அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் , 61 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியாகியுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close