fbpx
Others

தொடர் வாகன திருட்டு: கொள்ளையன் கூட்டாளியுடன் கைது….

சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு, மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பஹீம் (46). இவர், பெரியமேடு வீராசாமி தெருவில் காலணி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.இவர் கடந்த 22-ம் தேதி மதியம், தனது இருசக்கர வாகனத்தை தனது கடை முன்பு நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சிஅடைந்தமுகமதுஇதுகுறித்துபெரியமேடுகாவல்நிலையத்தில்புகார்அளித்தார்.அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்புத் துலக்கினர். இதில்,முகமதுவின்இருசக்கரவாகனத்தைத்திருடியதுகொருக்குப்பேட்டை,அண்ணாநகர்1வதுதெருவைச்சேர்ந்தசெல்வம்(38),அவரதுகூட்டாளியானஅதேபகுதிஅண்ணாநகர்4வதுதெருவைச்சேர்ந்தரவி38)என்பதுதெரியவந்தது.இதையடுத்துஇருவரையும்தனிப்படைபோலீஸார்கைதுசெய்தனர்.விசாரணையில் கைதான இருவரும் முகமது வாகனம் மட்டுமல்லாமல் யானைக்கவுனி, ஏழுகிணறு மற்றும் 2 இடங்களில் 4 இருசக்கர வாகனங்களை திருடியுள்ளதும், கடந்த 26-ம் தேதி பல்லவன் சாலை மேம்பாலம் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஜெரேமியா (47) என்பவரைத் தாக்கி அவர் வைத்திருந்த பணம்மற்றும்செல்போன்ஆகியவற்றைபறித்துச்சென்றுள்ளதும்தெரியவந்தது.இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள், ஒரு செல்போன் பறிமுதல்செய்யப்பட்டன.மேலும்விசாரணையில் கைதான செல்வம் மீது திருவண்ணாமலை, தாம்பரம், பூந்தமல்லி, யானைக்கவுனி, ஏழுகிணறு ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 8 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close
Close