தேனி–நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்..?( பிளக்ஸ் பேனர்கள் )
தேனி நகரில் மாபெரும் பிளக்ஸ் பேனர்கள் ? தேனிமாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் இரயில்வே கேட் அருகே நெடுஞ்சாலை துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கம்பி வேலி அமைப்புகளில் முழுவதும், பங்களாமேட்டில் உள்ள பயணியர் நிழற்குடையிலும் பயணியர் நிற்காமல் … பிளக்ஸ் பேனர்கள், கட்அவுட்கள் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் வைத்து சாலைகளில் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்….. நீதிமன்றத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு வரன்முறை படுத்தியும் இவற்றை பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் கண்டு கொள்வதே இல்லை…. அப்போது நீதிமன்ற உத்தரவை மதிக்கவே கூடாது என்று உறுதியாக இருக்கிறார்களா ? இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதே இல்லை ஏன் ? எதற்காக?? அரசியல்வாதிகளுக்கு துணை போகின்றார்களா ??? பல முறை இந்த செய்தியை பதிவிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தேனி நகர பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்….. இவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் இணைந்து நடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுபொதுமக்கள்விரும்புகின்றனர்…….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.