திருவள்ளூர் – மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா.
திருவள்ளூர் மாவட்டம் :- மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியபாளையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பிஜே மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சி எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அவை தலைவர் பிஎம் ரவிச்சந்தரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே கோவிந்தராஜன் நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா மற்றும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலைப் பற்றிய ஆலோசனைகளை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் சமீபத்தில் மறைந்த திமுகவைச் சார்ந்த கழக நிர்வாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சி.எச்.சேகர்,கே.ஜி.பாஸ்கர்,சுந்தரம் வெ.அன்புவாணன் ஜி.ஸ்டாலின் தே.உதயசூரியன் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் மு.பகலவன்,எம்.எல் .ரவி,மு.கதிரவன்,கே.வி.ஜி.உமாமகேஸ்வரி,எஸ்.ரமேஷ். பொதுக்குழு உறுப்பினர்கள் பி.வெங்கடாஜலபதி,பா.சே.குணசேகரன்,கே.சுப்பிரமணி டாக்டர்.கே.பரிமளா விஸ்வநாதன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏ.வி.ராமமூர்த்தி, சக்திவேலு, அபிராமிகுமரவேல்,அப்துல்ரஷீத், தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, கே.வி .லோகேஷ், வி.பி.ரவிக்குமார்,கா.சம்பத், சித்ரா முனுசாமி, ஜெயலலிதா சசிதரன், தனசேகரன், சுமன், கோல்ட்மணி, ராஜேஷ் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர். பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.