fbpx
Others

திருமழிசை பேரூராட்சி தலைவராகமகாதேவன் வெற்றி -உதயநிதிவாழ்த்து.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1, 6, 7, 13, 14, 15 என 6 வார்டுகளை அதிமுகவும் 3, 4, 5, 8, 10, 12 ஆகிய 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. 2வது வார்டை மதிமுகவும், 9வது வார்டை பாமக.வும், 11வது வார்டை சுயேட்சையும் கைப்பற்றின. இதில், திமுக கூட்டணி 7 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், அதிமுக கூட்டணியில் இருந்து தனித்து போட்டியிட்ட பாமக ஒரு வார்டையும், சுயேச்சையாக 11வது வார்டில் போட்டியிட்டவர் வெற்றி பெற்று பாஜவில் இணைந்தார். இதில், பேரூராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில், திமுகவைசேர்ந்தஉ.வடிவேல்தலைவராகவும்,ஜெ.மகாதேவன்துணைதலைவராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில் கடந்த மே 12ம் தேதி பேரூராட்சி தலைவர் உ.வடிவேல் விபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து கடந்த 6ம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்எல்ஏக்கள் சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய, பேரூர், வார்டு திமுக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close