தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரும் மாநில அமைப்பு செயலாளருமான இருதயம் மேரி தலைமை தாங்கினார் துணைத் தலைவர் மாவட்ட பிரச்சார செயலாளர் திலகவதி ஜாய்ஸ் கோமளா மாவட்ட துணைச் செயலாளர் ஜான்சி சர்மிளா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லா உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத் தலைவர் இருதயம் மேரி பேசுவையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் சுமார் 8,700 க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் 1400 க்கும் மேற்பட்ட பகுதி சுகாதார செவிலியர்கள் 384 சமுதாய நல செவிலியர்கள் பணியாற்று வருகிறோம் இந்த நிலையில் 3500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் சுமார் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளன தமிழக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகிறது பிக்மி30 பாயிண்ட் இதுவே இன்னும் சரியா ஆக்காமல் மிகவும் சிக்கலாக இருப்பதால் அதனை எளிமைப்படுத்தி பழைய பிக்மி 2.0 போதுமானது என்பதால் அதனை மீண்டும் தமிழ் படுத்த வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை பேசினர் ஆர்ப்பாட்ட இறுதியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜான்சி சர்மிளா நன்றி கூறினார்.