சிங்கம் மாயமானது / திரும்பி வந்தது எப்படி?–சிறப்பு செய்தி
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்உள்ளசிங்கம்ஒன்றுஅக்டோபர்3ம்தேதிமுதல்அதிகாரிகளின்கண்களில்படாமல்’காணாமல்போயுள்ளது’.இந்தசிங்கம்எங்குள்ளதுஎன்றுகுறிப்பாகதெரியவில்லை பூங்காவின்னுள்ளேயேதான்இருக்கக்கூடும்,வெளியேசெல்லவாய்ப்பில்லைஎன்றுஅதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து குழுக்கள், ட்ரோன்கள், கேமராக்கள் பயன்படுத்தி, சிங்கத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுது.இந்தநிலையில்3நாட்களுக்குப்பிறகுசிங்கம்தானாகவேதிரும்பிவந்துள்ளது. சிங்கம் மாயமானது எப்படி? அது திரும்பி வந்தது எப்படி?ஐந்து வயதான’ஷேர்யார்’என்றசிங்கம்,கடந்தஇரண்டுஆண்டுகளுக்குமுன்புவண்டலூர்பூங்காவுக்குகொண்டுவரப்பட்டது.அதுகர்நாடகாவில்உள்ளபன்னார்கெட்டா தேசிய பூங்காவிலிருந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் சென்னை கொண்டு வரப்பட்டது.அப்போது முதல் வண்டலூர் பூங்காவின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வருகிறது.இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி முதல் அந்த சிங்கம் தனது இரவு நேர இருப்பிடத்துக்கு வரவில்லை என்பதை அதிகாரிகள் கவனித்தனர். எனவே சிங்கம் ‘காணாமல் போனது’ என்ற தகவல்கள் வெளிவர தொடங்கின.சிங்கம் இரவு நேரங்களில் தனது இருப்பிடத்துக்கு வரவில்லை என்றாலும்சிங்கம்மாயமாகிவிட்டதுஎன்றசெய்திகளைபூங்காஅதிகாரிகள்மறுத்தனர்.ஷேர்யார் சிங்கம் வண்டலூரில் பாதுகாக்கப்பட்ட சிங்கம் சஃபாரிக்கு ஒதுக்கப்பட்ட நிலபரப்பில் உள்ளது என்றும் விரைவில் தானே இருப்பிடத்துக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சிங்கம் உயிரியல் பூங்காவை விட்டு வெளியே வர வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சஃபாரிக்கு என 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் வேலி அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட, செடிகளும் புதர்களும் அடர்ந்த பகுதியாகும்.சிங்கத்துக்கு காட்டில் இருப்பது போன்று இயற்கையான சூழலை உருவாக்க இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது போன்ற சிங்கம் சஃபாரி பகுதிகள் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்களிலும் உள்ளன.பொதுவாக வனப்பகுதிகளில் குறிப்பிட்ட இடங்கள் வன உயிர் சஃபாரி இடங்களாக இருக்கும். இந்த இடங்களில் வன விலங்குகளை அதன் இயற்கையான வாழ்விடங்களில் பார்வையிடலாம். இந்தப்பகுதிக்குள்பொதுவாகஉரியஅனுமதிப்பெற்று,வழிகாட்டுதல்களுடன் செல்லலாம்.இந்தியாவில் வனப்பகுதி அல்லாத, சில மிருகக் காட்சி சாலைகளிலும், சிங்கம் சஃபாரிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சிங்கங்கள் வரையறைக்குட்பட்ட இடங்களில், சுதந்திரமாக நடமாகக் கூடும். அவை கூண்டுக்குள் அடைக்கப்படாது. இந்த சிங்கங்களை பார்க்க விரும்பும் மக்கள், பிரத்யேக வாகனத்தைப் பயன்படுத்தி,அந்தப்பகுதிக்குள்சென்றுபார்வையிடலாம்.வண்டலூரில்இவ்வாறு50ஏக்கரில்சிங்கம்சஃபாரிக்கானஇடம்ஒதுக்கப்பட்டுள்ளது.சஃபாரிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கங்கள் சில நாட்கள் சுற்றி திரிவது அசாதாரணமானதோ, வழக்கத்துக்கு மாறானதோ அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும் ஷேர்யார் கடந்த சில நாட்களாக தனது இரவு நேர இருப்பிடத்துக்கு வராததால், சஃபாரி பகுதிக்குள் அது எங்கு உள்ளது என்று தேடி கண்டறியும் முயற்சியில் பூங்கா அதிகாரிகள் ஈடுபட்டனர்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூரில் சிங்கம் சஃபாரி செல்ல, பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் ரிட்டோ சிரியக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கம் மாயமாகவில்லை என்று தெரிவித்துள்ளார். சிங்கம் சஃபாரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் “முழுவதும் வேலி அமைத்தும், சுற்றுச்சுவர் எழுப்பியும் பாதுகாக்கப்படும் இடமாகும். சிங்கம் அங்கிருந்து வெளியே தப்பி செல்ல வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.சிங்கம் அந்த பகுதிக்குள்ளேயே சுற்றி திரிந்துக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பூங்கா இயக்குநர் , “அக்டோபர் 4ம் தேதி பூங்கா ஊழியர் ஒருவரும் இரண்டு பணியாளர்களும் ஷேர்யார் சிங்கத்தை சஃபாரி பகுதியினுள்ளே கண்டுள்ளனர். ஷேர்யார் இயல்பாகவும்,அமைதியாகவும், ஆரோக்யமாகவும் காணப்பட்டது. ஆனால் ஊழியர்கள் அருகே செல்லும் முன், மீண்டும் அடர்ந்த பகுதிக்குள் சென்றுவிட்டது” என்றும்
தெரிவித்தனர்.அக்டோபர் 5ம் தேதி, ஷேர்யாரின் புதிய கால்தடங்கள் சஃபாரி பகுதியில் காணப்பட்டன. இது சிங்கம் இன்னும் சஃபாரி பகுதிக்குள் தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) சிங்கம் தானாகவே உணவு உட்கொள்ளும் இடத்திற்கு வந்துள்ளது.இதனால் நிம்மதியடைந்த பூங்கா அதிகாரிகள் சிங்கத்திற்கு உணவு வழங்கிஅதைகூண்டில்அடைத்தனர்.ஷேர்யாரின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சஃபாரி பகுதி பகல் நேரத்தில் சாதாரண ட்ரோன்களாலும், இரவு நேரத்தில் தெர்மல் இமேஜிங் ட்ரோன்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர 10 கேமரா வலைகள் நிறுவப்பட்டுள்ளன. சஃபாரி பகுதியில்நிறுவப்பட்டுள்ளஇந்தகேமராக்களில் சிங்கம் தென்பட்டால், உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பப்படும்.முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப் படைத் தலைவர்) ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி மற்றும் தலைமை வனவிலங்குவார்டன்ராகேஷ்குமார்டோக்ராஆகியோர்சஃபாரிபகுதியைஆய்வுசெய்தனர்.வண்டலூர் பூங்காவை பார்வையிட்ட மாநில வன உயிர் வாரிய கௌரவ உறுப்பினர் ஆண்டனி ரூபின் சிங்கம் இப்படி சுற்றி திரிவது வழக்கமானது தான் என்று பிபிசி தமிழிடம் கூறுகிறார். “கூண்டில் வைக்கப்பட்டிருந்த சிங்கம் சஃபாரி பகுதியில் வெளியே விடப்பட்டது. அது சிங்கத்துக்கு புதிய அனுபவமாக இருக்கும். வெளியே வந்திருக்கும் சிங்கம் தனது சுற்றுப்புறத்தை ஆராய்ந்து வருகிறது, இது மிகவும் வழக்கமான நிகழ்வு. இப்படி பல முறை கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது,” என்றார்.சஃபாரி பகுதிகளில் விலங்குகளுக்கு உணவு வைக்கப்படாது என்பதால் இந்த சிங்கம் விரைவில் தனது இரவுநேர இருப்பிடத்துக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நிர்ணயிக்கப்பட்ட சஃபாரி பகுதிகளில் சிங்கங்களுக்கு உணவுவைக்கப்படாது, அவற்றின் இரவு நேர இருப்பிடத்தில் தான் உணவு வைக்கப்படும். எனவே சிங்கக்கள் தாமாகவே மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் இருப்பிடங்களுக்கு திரும்பிவிடும். இந்த சிங்கம் வெளியே வந்து நான்குநாட்கள்முடிந்துள்ளன. நான்கு நாட்களாக உணவில்லாமல் இருக்கக் கூடும் என்பது ஒரு கவலை” என்கிறார்.”சஃபாரி பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரியும் மயில்கள், முயல்களை சாப்பிட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த சிங்கம் இது வரைகையால் உணவளிக்கப்பட்டு பழக்கப்பட்டதாகும். எனவே இந்த சிங்கத்துக்கு வேட்டையாட தெரியாது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த சிங்கம் வண்டலூர் வந்த பிறகு,
இதைதத்தெடுத்து,இதன்பராமரிப்புசெலவுகளைநடிகர்சிவகார்த்திகேயன்ஏற்றுக்கொண்டார்என்றும்அவர்குறிப்பிடுகிறார்.சிங்கம், அதுவும் இளம் சிங்கம் இது போன்று சஃபாரி பகுதிக்குள் சுற்றி திரிவது முதல் முறையல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் சஃபாரி பகுதிக்குள் ஒரு சிங்கம் சுற்றி திரிந்துள்ளது. இது போன்ற தருணங்களில், சிங்கத்துக்கு பசி எடுக்கும் போது தானாக தனது இருப்பிடத்துக்கு திரும்பிவிடும் என்று பூங்காஇயக்குநர்தெரிவிக்கிறார்.அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா இயக்குநர் ரிட்டோ சிரியாக் பிபிசி தமிழிடம் பேசும் போது, “இந்த சிங்கம்வெள்ளிக்கிழமைஉணவுஉட்கொண்டது. பொதுவாக வன விலங்குகள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் உணவு சாப்பிடாமல் இருக்கும். பூங்கா பராமரிப்பில் இருப்பதால், இந்த சிங்கத்துக்கு பணியாளர்கள் தினமும் உணவு அளித்து வந்தனர். எனவே, தினமும் உணவு சாப்பிட்டு பழகிய சிங்கம், விரைவில் தனது இருப்பிடத்துக்கு வந்துவிடும் என்று நம்புகிறோம். சனிக்கிழமை எங்கள் பணியாளர்கள் சிங்கத்தை நேரில் பார்த்துள்ளனர். சஃபாரி பகுதியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை” என்று கூறினார்.பூங்கா இயக்குநர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ” கடந்த சில மாதங்களில் மூன்று நான்கு முறை இது போன்று சஃபாரி பகுதிக்குள் ஷேர்யார்சிங்கத்தைஅனுமதித்திருக்கிறோம். சஃபாரி பகுதியில் இருக்கும் சிங்கங்கள் வழக்கமாக மாலை 4.30 மணிக்கு தங்கள் இரவு நேர இருப்பிடத்துக்கு வந்துவிடும். வயதான சிங்கங்கள் வெகுதூரம் செல்லாது. ஆனால் இளம் சிங்கங்களுக்கு தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும். எனவே அவை வெகுதூரம்செல்லக்கூடும்.சனிக்கிழமைஎங்கள்பணியாளர்கள்எந்தப்பகுதியில்சிங்கத்தைபார்த்தார்களோ,அதையொட்டியபகுதிகளில்கண்காணிப்பைதீவிரப்படுத்தியுள்ளோம். எனினும் வேறு இடங்களுக்கும் சென்றிருக்க வாய்ப்புண்டு.சஃபாரி பகுதி என்பது மிகவும் பாதுகாப்பட்ட பகுதியாகும். அதை சுற்றிலும் 16 அடி உயரமுள்ள கம்பி வேலி மற்றும் சுற்றுச்சுவர் உள்ளது. பொதுவாக இந்த சுவரை தாண்டி விலங்குகள் வெளிவர இயலாது” என்று உறுதி அளித்தார். thanks bbc