“கோவையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரும் கைது….
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “கோவையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பதை அறிந்து அங்கு போலீஸார் சுற்றி வளைத்தனர்.அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை அவர்கள் மூவரும் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து குறைந்தபட்ச படையை கொண்டு போலீஸார் தற்காப்புக்காக அவர்களை காலில் சுட்டு பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் கார்த்தி என்கிற காளீஸ்வரன், சதீஷ் என்கிற கருப்பசாமி, குணா என்கிற தவசி என தெரியவந்தது. இதில் கார்த்தி, கருப்பசாமி இருவரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள். 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருக்கிறார்கள். தவசி என்கிற குணா, மதுரை மாவட்டம் கருப்பாவூரணி பகுதியைச் சேர்ந்தவர். இவரும் 10, 20 ஆண்டுகளாக கோவையில் இருந்து வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதும் 4 அல்லது 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.கிணற்றுக்கடவு பகுதியில் நடந்த கொலை வழக்கு இவர்கள் மீது நிலுவையில் உள்ளது. கே.சி.சாவடியில் அடிதடி வழக்கு, துடியலூர் பீளமேட்டில் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சத்தியமங்கலத்தில் திருட்டு வழக்கில் கைதான மூவரும் கைது செய்யப்பட்டு 30 நாட்களாக வெளியே ஜாமீனில் இருக்கிறார்கள்.அவர்கள் மூவரும் இருகூரில் வசித்து வருகிறார்கள். இருகூரில் வீட்டில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் இருந்த காரின் கண்ணாடியை கல்லால் உடைத்து , அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கினர். பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மூவரும் திருமணமாகாதவர்கள். இவர்களில் சதீஷ் என்கிற கருப்பசாமிக்கு வயது 30, குணா என்கிற தவசிக்கு வயது 20, கார்த்தி என்கிற காளீஸ்வரனுக்கு வயது 21. இவர்களில் காளீஸ்வரனும் கருப்பசாமியும் அண்ணன் தம்பிகள். இவர்களது தூரத்து சொந்தம் குணா!இந்த சம்பவம் யதார்த்தமாக நடந்தது
போல்தான்தெரிகிறது.திட்டமிட்டுநடந்ததுபோல்இப்போதைக்கு தெரியவில்லை. வழக்கு விசாரணையில்தான் தெரியவரும். கோயில்பாளையத்தில் ஒரு வீட்டில் சாவிபோடப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டுதான் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இந்த வாகனம் திருட்டு குறித்து கோயில்பாளையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 300சிசிடிவிகாட்சிகளைஆராய்ந்ததில்இவர்கள்தான்குற்றவாளி என அடையாளம் கண்டோம். கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்தை எந்த ஊடகங்களிலும் வெளியிட வேண்டாம். குற்றவாளி கண்டுபிடிக்கும் அணிவகுப்பு நடத்த வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டுவார். அதுவரை அவர்களது புகைப்படங்களை வெளியிட வேண்டாம். யதேச்சையாக சம்பவ இடத்திற்கு மூவரும் வந்த போது ஒரு கார் நிற்பதை பார்த்துவிட்டு இவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.296டி, 118, 324, 140, 309, 18 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் நேற்று இரவு 10.45 மணி முதல் 11 மணி வரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம். இதில் கருப்பசாமி, கார்த்திக்கு இரு காலில் குண்டு பாய்ந்தது. காளீஸ்வரனுக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.