கெங்கவல்லி–அரசு பஸ்ஸை மாணவர்கள் திடீரென்று சிறைபிடித்து மறியல் போராட்டம்..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 370க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். பள்ளிக்கு நல்ல மாத்தி, நினங்கரை, 95 பேளூர், நரிப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினந்தோறும் அரசு பஸ்சில் வருகின்றனர்.ஆத்தூரில் இருந்து காலை 5.30 மணிக்கு பஸ் புறப்படுவதால், மாணவர்கள் விரைவாக பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் காலையில் சாப்பிட கூட முடியாமல், அதிகாலை 5 மணிக்கே எழுந்து பள்ளிக்கு தயாராகி கிளம்பும் சூழல் நிலவி வருகிறது. அதேபோல மாலையில் 5 மணிக்கு, நல்லமாத்தி பகுதியில்இருந்துபேருந்துஇயக்கப்படுவதால்,பள்ளியில்10,11,12ம்வகுப்புமாணவர்கள்,சிறப்புவகுப்புகள்முடிந்து5.30மணிக்குமேல்செல்வதில்சிக்கல்ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி மாணவர்கள்,பலமுறைபோக்குவரத்துதுறைஅதிகாரிகளிடம்புகார்தெரிவித்துள்ளார்.ஆனால்நடவடிக்கைஎடுக்கப்படவில்லைஎனகூறப்படுகிறது.இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு அருகில் அரசு பஸ்ஸை மாணவர்கள் திடீரென்று சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி மாணவர்கள்கூறுகையில், ‘ காலையில் சாப்பிட கூட முடியாமல், பள்ளிக்கு முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை உள்ளது.அதே போல மாலை சிறப்பு வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் இயக்கப்படும் நேர பிரச்னையே இதற்கு காரணமாகும். மாணவர்கள், காலை 9 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் பஸ்சில்செல்வதற்கு ஏற்ப இயக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டால் வசதியாக இருக்கும்’ என்றனர்.இதுபற்றி அறிந்துசம்பவஇடத்துக்குவந்தகூடமலைகிராமநிர்வாகஅலுவலர்சக்திவேல்மறியலில்ஈடுபட்டமாணவ,மாணவிகளுடன்பேச்சுவார்த்தையில்ஈடுபட்டார்.மேலும்,ஆத்தூர்அரசுபோக்குவரத்துக் கழக மேலாளரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கெங்கவல்லி-தம்மம்பட்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.