கும்மிடிப்பூண்டி– 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…

கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிஹார் இளைஞர் கைது செய்யப்பட் டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அருகேயுள்ள புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ளனர்.இந்நிலையில், புதுப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபிஹார்மாநிலதம்பதியின்3வயதுபெண்குழந்தைகாணாமல்போனது.நீண்டநேர தேடுதலுக்கு பிறகு, அந்தக் குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அங்குள்ள முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், பெண் ஒருவர் அளித்த தகவலின் பேரில், புதுப்பேட்டை பகுதியில் தங்கியிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிப்பின் மான்ஜி(19) என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அந்த இளைஞர் பிஸ்கட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ, தாக்குதல், கொலை உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து பிப்பின் மாஞ்சியை நேற்று கைது செய்தனர்.இந்நிலையில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக்கண்டித்து புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் தடுத்தும், அதை மீறி பேரணியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.அதைத்தொடர்ந்து, சிப்காட் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் கும்மிடிப்பூண்டி (பொறுப்பு) டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள், ‘‘சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு உடனடியாக தூக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும்.பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்ததோடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து, எங்கள் கோரிக்கைளைஏற்பதாகஉறுதியளிக்கும்வரைபோராட்டம்தொடரும்’’எனகோஷமிட்டனர்.போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்களை கலைக்க முயன்ற போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக், சம்பவ இடம் விரைந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.புதுப்பேட்டை கிராமத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுவருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறியதாவது: குழந்தை சிகிச்சைக்காக இரவு 10.30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மயக்க நிலையில் இருந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பிறப்பு உறுப்பு மற்றும் மலம் கழிக்கும் இடம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டிருந்தது. அதுவும் குழந்தையின் இறப்புக்கு காரணம். அதிகாலை 4.30 மணிக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைய தொடங்கியது. 7.30 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே, கைதான பிப்பின் மான்ஜி தங்கி இருந்த அறையில் மேலும் 3 பேர் தங்கியிருந்ததால், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இச்சம்பவத்தில் அவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்ட குழந்தையும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.