fbpx
Others

நீதிபதி எஸ் அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம்.

செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் நீதிபதி எஸ் அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து 58 முறை அவரது நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து அந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வரும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றநீதிபதிஎஸ்அல்லிசென்னைஉயர்நீதிமன்றதலைமைபதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.அமலாக்கத்துறையால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஜாமீன் கோரி அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றபோதும் அவருக்கு சாதகமான உத்தரவு என்பது கிடைக்கவே இல்லை. இதனால் அவர் சென்னை புழல் சிறையிலேயே உள்ளார்.இதுஒருபுறம்இருக்கஅமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கு என்பது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக எஸ் அல்லி உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியபோது அமலாக்கத்துறை வாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி எஸ் அல்லி தான் உத்தரவிட்டார். அதோடு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீதிபதி அல்லி தான் 58 முறை நீட்டிப்பு செய்துள்ளார்.கடந்த 3ம் தேதி கூட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சிறையில் இருந்தபடியே அவர் காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செப்டம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இது தான் 58 வது நீதிமன்ற காவல் நீட்டிப்பாகும்.மேலும் தற்போது செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதாவது சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக ஜோதி ராமன் என்பவர் இருந்தார். இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தலைமை பதிவாளர் பொறுப்பு என்பது காலியாக இருந்த நிலையில் அந்த பதவிக்கு எஸ் அல்லி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எஸ் அல்லி வகித்து வந்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக  தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் வரும் நாட்களில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை நீதிபதி அல்லி விசாரிக்க மாட்டார். அவருக்கு பதில் நீதிபதி கார்த்திகேயன் தான் விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.அமலாக்கத்துறை வழக்கு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close