ஈரோடு–கோயில்திருவிழாவில் குண்டம் இறங்கிய அமுதா ஐஏஎஸ்…
பாதுகாப்பு ஏற்பாடுகள்: குண்டத்தின் இரு பகுதிகளிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்புப்பாக நிறுத்தப்பட்டு, பக்தர்கள் முறையாக குண்டமிறங்க உதவினர்.தமிழகம், கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள், காவல்துறையினர், அதிரடிப்படையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், திருநங்கையர் என பல்லாயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய பின், கால்நடைகள் குண்டம் இறங்கஅனுமதிக்கப்படவுள்ளது. குண்டம் விழாவையொட்டி, பண்ணாரி அம்மன் தங்கக் கவசம் அணிந்து வீணை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.சிறப்பு பேருந்துகள் இயக்கம். பண்ணாரி மரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.குண்டம் திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை (27-ம் தேதி) புஷ்பரத ஊர்வலமும், 28-ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும், 29-ம் தேதி தங்கரத புறப்பாடும் நடக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.