சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பார்க்கிங்பிரச்சனையா…? அதிகாரபலமா….?
ஜேசிபி மூலம் அகற்றம்: பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே சாஸ்திரி நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரோகினி நேற்று காலை திடீரென காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை ஜேசிபி மூலம் அகற்றியுள்ளார். இதை பார்த்த மற்ற போலீஸார் மற்றும் வாகன உரிமையாளர்கள், ஆய்வாளர் ரோகினியிடம் கேட்டுள்ளனர்.அப்போது அவர், ஒரு மாதமாக இங்கே வாகனத்தை நிறுத்த வேண்டாம் என கூறி வருகிறேன், யாரும் கேட்பதில்லை. இந்த காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான வாகனங்கள் மட்டுமே நிறுத்த வேண்டும். அதை தவிர, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸாரின் வாகனங்கள் நிறுத்க்கூடாதுஎனகூறியுள்ளார்.இதையடுத்து, மற்ற காவல் நிலைய அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரோகினியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.சென்னை அடையாறு சாஸ்திரி நகர்
காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளராக ரோகிணி என்பவர் பணியாற்றி வருகிரார். இவர் தனது அதிகாரப்பூர்வ ஜீப்பை காவல் நிலைய வளாகத்திற்குள் கொண்டு செல்வதற்கு மற்ற காவலர்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் இடையூறாக இருப்பதாகக் குற்றம்சாட்டி வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.மேலும், காவல் நிலைய வளாகத்தின் குறிப்பிட்ட பகுதியில் வேறு யாரும் இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், அந்த இடத்தில் தனது ஜீப்பை மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (20.06.2026) காலை பணிக்காக வந்த ரோகிணி, தனது ஜீப்பை உள்ளே கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவலர்களை வெளியே வரவழைத்து, அவர்களது இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அந்த இடம் தனக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பகுதி என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறதுஇந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதுடன், வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஒருவர், அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. .