fbpx
Others

வெனிசுலாநாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள்கைது செய்துள்ளன…

ஒரு நாட்டுக்குள் நுழைந்து இன்னொரு நாட்டின் படை அந்த நாட்டின் அதிபரை கைது செய்ய முடியுமா? இதற்கு பலரின் பதில் இல்லை என்பது தான். ஆனால் அதனை இன்று நிகழ்த்தி காட்டி உள்ளது அமெரிக்கா. வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் இன்று கைது செய்துள்ளன.அமெரிக்கா – வெனிசுலா இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்தால் ரூ.438 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அமெரிக்காவின் இந்த முயற்சி கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் நள்ளிரவில் போர் விமானங்கள் மூலமாக வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் தாக்கப்பட்டது. 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. இது தான் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ளது. அமெரிக்க படைகள் எப்படி வெனிசுலாவுக்குள் நுழைந்து அதிபர் நிகோலஸ் மதுரோவை மற்றும் அவரது மனைவியை கைது செய்தது என்பது பற்றி டொனால்ட் டிரம்ப் மற்றும் ராணுவ அதிகாரிகள் இன்று விளக்கினர்.இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப் கூறும்போது, ‛‛பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான ஒரு அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் வரை நாங்கள் இந்த நாட்டை (வெனிசுலா) ஆளப் போகிறோம். வேறு ஒருவரை ஆட்சியில் அமர வைக்க நாங்கள் விரும்பவில்லை. அப்படி நடந்தால் கடந்த பல ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அதே நிலைமைதான் மீண்டும்Venezuela US America ஏற்படும். எனவே, நாங்கள் இந்த நாட்டை ஆளப் போகிறோம்” என்று கூறியுள்ளார்.இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா எவ்வளவு காலம் வெனிசுலாவை நிர்வகிக்கும், அங்கு செய்யப்படும் ஏற்பாடுகள், எந்த சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என்பது பற்றி எதையும் விளக்கி கூறவில்லை. இதனால் வெனிசுலாவை, அமெரிக்கா கைப்பற்ற திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்காவும், வெனிசுலாவும் அண்டை நாடுகள் தான். இருநாடுகள் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இருநாடுகள் இடையே கரிபீயன் கடல் தான் உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் நம் நாட்டையும், இலங்கையையும் கடல் பிரிப்பது போல் அமெரிக்கா, வெனிசுலா நாட்டை கடல் பிரிக்கிறது. இதனால் அமெரிக்கா நினைத்தால் வெனிசுலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Related Articles

Back to top button
Close
Close