அமித்ஷா,உத்தவ் தாக்கரே இடையே மோதல்….?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். இது செயல்படுத்தப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதற்கிடையே தான் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி திமுக எம்பி கனிமொழி தலைமையில் ‛இந்தியா’ கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தின்லோக்சபாசபாநாயகர்ஓம்பிர்லாவிடம்நோட்டீஸ்வழங்கினர்.‛இந்தியா’ கூட்டணியின்120எம்பிக்கள்கையெழுத்திட்டுள்ளனர்.இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நாடாளுமன்ற லோக்சபாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை தொடர்பான விவாதம் நடந்தது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‛‛நீதிமன்ற வழக்கில்தோற்றால்உடனடியாகஅவர்கள்(இந்தியாகூட்டணி)நீதிபதியைகுற்றம்சாட்டுகிறார்கள். ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. வாக்கு வங்கி அரசியலை திருப்திப்படுத்துவதற்காக தான் இந்த பதவி நீக்க தீர்மானம்.நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான். எனவே இந்த நாட்டின் மக்கள் மக்கள் ஒருபோதும் அவர்களுக்கு (இந்தியா கூட்டணி)உதவிசெய்யமாட்டார்கள்”என்றுஆக்ரோஷமாககூறினார்.அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ் அணி) தலைவருமான உத்தவ் தாக்கரேவையும் விமர்சனம் செய்தார். ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய அவரது கட்சி எம்பிக்கள் ஆதரவு அளித்த நிலையில் அமித்ஷா விமர்சனம் செய்தார்.அமித்ஷாவின் இந்த கருத்து தற்போது அவருக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதலாக மாறி உள்ளது. அதேபோல் உத்தவ் தாக்கரே, அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி உத்தவ் தாக்கரே கூறியதாவது: ‛‛அமித் ஷா எனக்கு இந்துத்துவம் கற்றுக்கொடுக்கும்
நிலையில் இல்லை. அவர் முதலில் தனது கட்சியின் அமைச்சர்களை பார்க்க வேண்டும். அமைச்சரவையில் கிரண் ரிஜிஜு போன்ற மாட்டிறைச்சி உண்ணும்மைச்சர்கள் உள்ளனர். எனவே அமித்ஷாமுதலில்சுயபரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் அமைச்சரவையில் உள்ள கிரண் ரிஜிஜு மாட்டிறைச்சி உண்பதாக கூறியுள்ளார்.நீங்கள் இந்துத்துவாவை ஊக்குவிப்பதாக சொன்னால், உங்கள் மாட்டிறைச்சி உண்ணும் அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்வீர்களா?. சாது ஒருவரை கொன்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரை அமித் ஷா பாஜகவில் சேர்த்தார். அவர் இந்துத்துவாவிற்கு என்ன செய்தார்? பிறருக்குஇந்துத்துவாவைக் கற்றுக்கொடுக்கும் முன், அமித் ஷா தனது சொந்த இந்துத்துவாவை ஆராய வேண்டும்” என்று காட்டமாககூறினார்.