தினக்கூலி தொழிலாளர்கள் மீதான பாஜக அரசின் வெளிப்படையான தாக்குதல்…
வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் உள்ளது. சந்தைப்படுத்தக்கூடிய தொழிலாளர் வகைகளில் பரந்த வேறுபாடுகள் இருப்பதால், நாடு முழுவதும் எந்த வொருதனிப்பட்ட வேலைக்கும் நிலையான ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படவில்லை. குறைந்த பட்ச ஊதிய சட்டம் குறைந்தபட்ச ஊதியத்தை, கூடுதல் நேரம், வேலை, நேர வேலை என, உழைப்பின் வகையைப் பொறுத்து வகைப் படுத்துகிறது. கூடுதலாக, வாழ்க்கைச் செலவு மற்றும் பிற பொருளாதார நிலைமைகள் அடிப்படையில், இந்தச் சம்பளங்கள் வழக்கமானஅடிப்படையில்புதுப்பிக்கப்பட வேண்டும்.ஆனால் அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் கடந்த எட்டு ஆண்டுகளாக திருத்தப்படவில்லை. 2017-ஆம் ஆண்டு முதல் தேசிய அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்படாமல் இருப்பது, நமது நாட்டின் கோடிக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் மீதான பாஜக அரசின் வெளிப்படையான தாக்குதலாகும். பொருளாதாரம் வளர்ச்சி அடைவதாகப் பேசும் மோடி அரசு, அந்த வளர்ச்சியின் பலன்கள் தொழிலாளர்களை எட்டக்கூடாது என்று திட்ட மிட்டுச் செயல்படுகிறது.சட்டம் இருந்தும் அதை செயல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2019 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட ஊதியக் குறியீடு சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்பது தற்செயலானது அல்ல. மேலும் தினக்கூலியில் மாநிலங்களுக் கிடையிலான அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. தில்லியில் திறன் குறைந்த தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ.710 கிடைக்கும் போது, பீகாரில் அதே தொழிலாளருக்குவெறும்ரூ.428மட்டுமேகிடைக்கிறதுஎன்பதுவர்க்கச்சுரண்டலின்கொடூரமானமுகமாகும்.இந்தஏற்றத்தாழ்வுமாநிலங்களுக்கிடையில்தொழிலாளர்களின்இடம்பெயர்வைகட்டாயப்படுத்துகிறது.பணவீக்கம் உயர்ந்துள்ள போதிலும் அதை சமாளிக்க ஊதியம் உயர்த்தப்படவில்லை. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், ஊதியம் திருத்தப்படாமல் இருப்பது தொழிலாளர்களின் வாங்கும் திறனை மட்டுப்படுத்துகிறது. இதன் பொருள் உண்மையான ஊதியம் ஆண்டுதோறும் சரிந்து கொண்டிருக்கிறது.இதனால்தொழிலாளர்கள்ஏழ்மையில்உழன்றுவருகிறார்கள்.பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்று பெருமை பேசும் மோடி அரசு, அந்த வளர்ச்சியின் பலன்கள் பெருமுதலாளிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மட்டுமே செல்வதை உறுதி செய்கிறது. தோட்டத்தொழிலாளர்கள், சேவைத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ்தள்ளப்படுகின்றனர். குறைந்தபட்ச ஊதியம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அதை பறிப்பதை அனுமதிக்கலாகாது.