ராணிப்பேட்டை–அங்கன்வாடி ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.. . .

ராணிப்பேட்டை ஜூன் 18 :- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழாக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவ்வாற்பாடத்தின் போது சிவகங்கை மாவட்ட செயலாளர் பாக்கியலட்சுமி, தென்காசி மாவட்ட செயலாளர் மணிமேகலை ஆகியோரின் தற்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும்விருதுநகர் மாவட்டத்தில் எஃப்ஆர்எஸ்போடாதஊழியர்களின்சம்பளபிடித்தம்பிடிக்கப்பட்டுள்ளதுஅதனை திரும்ப ஊழியர்களுக்கு வழங்கவும் ஆறு வருடங்களாக புதிய செல்போன் வழங்காத 22 மாவட்டங்களுக்கு செல்போன் வழங்க வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பாரதி தலைமை தாங்கினார், சி ஐ டி யு மாவட்ட தலைவர் தவராஜ், மாவட்ட பொருளாளர் மாலதி, இணை செயலாளர் சி. ரேவதி, ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் பி. மணி, சி ஐ டி யு.மாவட்டத் துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்இதில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.