fbpx
Others

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் மாவட்ட வட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில், கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட குழுவில் உறுதி செய்யப்பட்ட கோரிக்கைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்கும் வகையில் சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும், பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் எனவும், வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதிகமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முற்றாக கைவிட வேண்டும் எனவும், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ,விஜய்சேகர் ,எம்.சக்கரவர்த்தி, கஜேந்திரன், ஆனந்த்பாபு, லோகநாதன் உள்ளிட்ட. 100 வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close