முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத்வரை
ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது.அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டுஇரசிக்கும்தமிழ்நாட்டுமக்கள்உள்ளிட்டதென்னிந்தியமக்களுக்கும்,இந்தியத்திரைத்துறைக்கும்பேரிழப்பாகும்..இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்..அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரதுகுடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”என்றுபதிவிட்டுள்ளார்.ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்யவதி தம்பதிகளுக்கு 23 ஏப்ரல் 1938 இல் பிறந்த.எஸ்.ஜானகி சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார்.1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில்மட்டுமல்லாமல்,கொங்கணி,துளு,சௌராஷ்டிரம்,இந்தி,வங்காளம்,சமஸ்கிருதம்,சிங்களம்,ஆங்கிலம்ஆகியமொழிகளில்ஆயிரக்கணக்கானபாடல்களைப் பாடினார்.தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட.பல்வேறு இசையமைப்பாளர்கள்இசையில்ஆயிரக்கணக்கானபாடல்களை பாடியுள்ளார்.நான்கு முறை தேசிய விருதுகள் பெற்ற இவர் கடந்த சிலஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.இந்த நிலையில்,இன்றுவயதுமூப்புகாரணமாக ஜானகி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர்இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.