GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
புதுச்சேரி முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை…!

புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று முதல்வர் சபாநாயகர் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சட்டசபையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதற்கான சிறப்பு முகாம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது.
முதல்வர் நாராயணசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து அமைச்சர் கந்தசாமி துணை சபாநாயகர் பாலன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் என மொத்தம் 125 பேருக்கு உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. முடிவுகள் இன்று வெளியாகின்றன
















