நுங்கம்பாக்கத்தில் “A for Art” கலைக் கண்காட்சி — நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற ஓவியர் பிரபாகரன் ஸ்வாமிநாதன் மற்றும் சுதார்த் எஸ். பிரபாகரன் இணைந்து நடத்தும் “A for Art” கலைக் கண்காட்சி – சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள “கேலரி வேதா”வில் “A for Art” எனும் சிறப்பு கலைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்தக் கண்காட்சியை பார்வையிட அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.இந்த கலைக் கண்காட்சி பிப்ரவரி 11, 2026 வரை நடைபெறும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை நாளாக இருக்கும்.கண்காட்சி தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.இந்தக் கண்காட்சியில் பல்வேறு கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலை மற்றும் படைப்பாற்றலை நேசிக்கும் அனைவரும் வருகை தந்து கலைஞர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும் கலை தொடர்பான தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளை அறிய @aforart.official என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரலாம்.
இடம்:“Gallery Veda”4/22, Rutland Gate, 5th Street,Nungambakkam, Chennai – 600006.
