Others
புஞ்சைபுளியம்பட்டி அருகே நாய் கடித்து 4 பேர் காயம்…?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தபுஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளை யம் பகுதியில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென அந்தப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்களை அந்த நாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், நடராஜ், கணேசன்,ராசம் மாள் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் கண்ணம்மாள்என்பவருக்குசொந்தமானஆட்டையும்கடித்தது.நாய்க்கடியில் காயம் அடைந்தவர்கள் புஞ்சை புளியம் – பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை . பெற்றனர். வெங்கநாயக்கன்பாளைம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தாதவண்ணம் வளர்க்க வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்