fbpx
Others

முதல்வர் மு.க.ஸ்டாலின்–ஆளுநர் அரசியல்சட்டத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்

மு.க.ஸ்டாலின்

  • தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் கொண்டு வரும் விரும்பத்தகாத நிகழ்வு நடைபெறுவது வருத்தமளிக்கிறது. ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போதோ, அல்லது நான் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு செல்லும்போதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை ஆளுநர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆளுநர் என்பவர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும் என சர்க்காரியா குழு பரிந்துரைத்துள்ளது.  நாள்தோறும் ஒரு கூட்டம். நாள்தோறும் ஒரு விமர்சனம் என ராஜ்பவனை அரசியல் பவனமாக மாற்றி வருகிறார். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவை இல்லை என அண்ணா கூறியுள்ளார். அனுமந்தையா நிர்வாக சீர்திருத்த ஆணையம், கட்சி, ஒருதலை சார்பு தன்மை இன்றி ஆளுநர் செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.ஆளுநரை நீக்கும் அதிகாரம் சட்டமன்றதுக்கு இருக்க வேண்டும் என்கிற கருத்து தெரிவிக்கபட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டது. ஆளுநர் அரசியல் சட்டதுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல என வி.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அ.தி.மு.க  ஆளுநர் தமிழக அரசுக்கும் மக்களுக்கும் நண்பராக இருக்க தயாராக இல்லை. ஆளுநர் வரையறுத்த தகுதிகளை மீறி செயல்படுகிறார். ஆளுநரின் அரசியல் விசுவாசம் அரசியல் அமைப்பு சட்டத்தை விழுங்கி விட்டது. மதசார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்’என்று தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close