fbpx
Others

சூறை காற்றுடன் வேலூர், வாணியம்பாடி சுற்று வட்டாரங்களில் மழை..


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள் மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் போட்டி போட்டிக்கொண்டு உக்கிரமாக சுட்டெரித்தது. வேலூரை விட திருப்பத்தூர் மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.இதற்கிடையில், அக்னி நட்சத்திர வெயில் நேற்று தொடங்கிய நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த தகவல் மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.இந்தாண்டு கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றிருந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நேற்று மாலை காட்பாடி, வேலூரில் சூறை காற்றுடன் மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்களுக்கு பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.சூறைக்காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் வேலூர், காட்பாடி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அக்னி வெயில், சூறை காற்று மழையுடன் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திம்மாம் பேட்டை, அலசந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்தது.

Related Articles

Back to top button
Close
Close