fbpx
Others

பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம் …. காங்கிரஸ்கேள்வி

ஆட்சி நிர்வாகம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:- பா.ஜனதா கட்சியினர் அனைவரையும் மிரட்டி ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறார்கள். பிரதமர் மோடி ஒரு நீர்ப்பாசன திட்டத்தை ஆவது செயல்படுத்தினாரா?. சட்டசபை தேர்தல் வருவதால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வருகிறார்கள். கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கும் மோடி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கும் மோடி, சட்டசபை தேர்தலுக்கு மோடி. மோடி வந்து தான் இங்கு ஆட்சி செய்கிறாரா?. தூக்கி எறிய வேண்டும் நாட்டில் 60 சதவீத மக்கள் மோடிக்கு எதிராக உள்ளனர். மத்திய அரசின் துறைகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் மட்டும் 3 லட்சம் காலியிடங்கள் இருக்கின்றன. நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற பா.ஜனதாவை தூக்கி எறிய வேண்டும். வீடு வீடாக சென்று பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகம் குறித்து எடுத்துக்கூற வேண்டும். பாட்னாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்திவிட்டனர். இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதாவினர் சாதி, மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சி இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என அனைத்து மதங்களையும் சமமாக பார்க்கிறது. பா.ஜனதாவினர் அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இதை மக்கள் கவனிக்க  வேண்டும். மோசமான பிரதமர் கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன், ஊழல்கள் நடைபெறுவது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேச வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் மோடியை போன்ற மோசமான பிரதமரை பார்த்தது இல்லை. எங்கு சென்றாலும் காங்கிரஸ் தலைவர்களை குறை சொல்வதே அவரது வேலை. பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டிய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார். இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close