ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு தடை ; டெல்லி ஐகோர்ட் உத்தரவு !!

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்து பொருட்களை விற்பனை செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட் மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சரியான மற்றும் முறையான வழிகாட்டுதலின்றி தினமும் லட்சக்கணக்கான மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாகவும், மேலும் முறையான டாக்டர்களின் ஆலோசனையின்றி இந்த மருந்துகளை உட்கொள்வதால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாக டெல்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்குதல் செய்திருந்தார்.
மேலும் ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகள் பெரும்பாலானவை அனுமதிக்கப்படாதவை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜேந்திர மேனன் , வி.கே .ராவ் ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையிலும் மேலும் மனுதாரர் அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும்
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு தடை செய்வதாக டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.















