fbpx
Others

அமைச்சர் மா.சுப்பிரமணியன் — 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. டெல்லி செல்ல முடிவு

திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட விவகாரத்தில் நாளை முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.   ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்வோம். சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என்று தெரிந்தால் அரசு நிச்சயம் சரி செய்யும் என கூறினார். இரு விரல் பரிசோதனை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையஉறுப்பினர் தவறான தகவல்அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது.  இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை எனக் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்தபின் பரிசோதனை நடந்ததாக கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிகார போதையில் கூறியுள்ளார். தொடர்ந்து மிரட்டினால் ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவோம். குழந்தைகளின் நலன் கருதி ஆடியோ ஆதாரத்தை வெளியிடவில்லை எனவும் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close