fbpx
Others

விளைநிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்த்த விவசாயிகள் மீது குண்டாஸ்

 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பேருந்தில் இலவசப்பயணம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் உதவித்தொகை என கவர்ச்சி கரமான திட்டங்களுக்கு மத்தியில், திமுக அரசின் மக்கள் விரோத செயலை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.சென்ற அதிமுக ஆட்சியில் சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது தமிழக மக்களும், ஊடகங்களும் ஆதரவு அளித்தன. விவசாய நிலங்களை அழித்து தான் இவ்வளவு பெரிய சாலை போட வேண்டுமா என விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்களும் நின்றனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதனை பயன்படுத்தி கொண்டது. அன்று கைது செய்த விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என குரல் கொடுத்தது.விவசாயிகள் போராட்டம், தமிழக மக்கள் ஆதரவு, ஊடகங்கள் ஆதரவு, எதிர்க்கட்சி ஆதரவு போன்றவற்றால் 8 வழிச்சாலை கிடப்பில் போடப்பட்டது.     அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக 8 வழிச்சாலை கைவிடப்படவில்லை என இதுவரை உறுதி அளிக்கவில்லை. அன்று 8 வழிச்சாலைக்குஎதிராகபோராடியவிவசாயிகள்தான்,இன்றுதிருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக 100 நாட்களாக போராடி வந்தார்கள். அன்று 8 வழிச்சாலைபோராட்டத்தைவீரியமாககாட்டியஊடகங்கள்,விளைநிலத்தில்சிப்காட்பற்றியசெய்தியைவீரியமாககாட்டவில்லை. எதிர்க்கட்சியும் இந்த போராட்டங்களைகண்டுகொள்ளவில்லை.இந்தபோராட்டத்தைபலவீனப்படுத்தபோராட்டத்தின்ஒருங்கிணைப்பாளர்களான 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்தது. இதன் மூலம் போராடும்மற்றவிவசாயிகளுக்கு, அரசை எதிர்த்தால் உங்களுக்கும் கைது நடவடிக்கை என்ற பயத்தை உண்டாக்கியது. 6 விவசாயிகளின் குடும்பங்கள் அமைச்சர் ஏவா வேலுவை சந்தித்து விடுதலை செய்ய கோரிக்கை வைத்தனன் விளைவாக, அவர்கள் மீதான குண்டாஸ் விளக்கி கொள்ளப்பட்டது. அதாவது, விளைநிலங்களை அழித்து தொழிற்சாலை அமைக்கும் அரசின் அராஜக போக்கை எதிர்த்து போராடுபவர்கள் மீதான கைது நடவடிக்கையின் போது, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. ஆனாலும், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்க மாட்டோம் என அரசு கூறவில்லை. இதுவரை மன்னிப்பு கேட்காத ஒரு விவசாயி மீது குண்டாஸ் அப்படியே உள்ளது. இதன் மூலம் குண்டாஸ் எவ்வளவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என அனைவரும் புரிந்து கொள்ளலாம்.    விடுதலைக்காக போராடிய நமது முன்னோர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்து போது, அன்று யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. சாவர்க்கர் போன்றவர்கள் வேண்டுமாயின் மன்னிப்பு கேட்டிருக்கலாம். இனிமேல் எங்களுக்கு எதிராக போராட மாட்டேன் என்று உறுதி அளித்தால் விடுதலை என பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது. அதே போன்ற பாணியை திமுக அரசு இன்று கையாள்கிறது. மன்னிப்பு கேட்காதவர் மீது என்னென்ன அவதூறு பரப்பலாம் என அரசு காத்திருக்கிறது. பலரும் தன் வேலை, தன் குடும்பம் என சுயநலமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், சக விவசாயிகளுக்காக போராடும் இதுபோன்றவர்களை பாதுகாக்க வேண்டும். இவர்களை அடக்கி விட்டால், நாம் வென்று விடலாம் என அரசு நினைக்கிறது. அது வெறும் பகல் கனவே என கடந்த கால போராட்டங்கள் உணர்த்தி உள்ளன.   எந்த ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை அடக்கி ஒடுக்கவே அனைத்து அரசுகளும் நினைக்கின்றன. அதில் திமுகவும் விதிவிலக்கல்ல. விளைநிலங்களை அழித்து சிப்காட் உருவாக்கும் முயற்சியில் திமுக வென்றால், அடுத்தடுத்து 8 வழிச்சாலை என பல விஷயங்களில் நம்மால் மக்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை திமுகவிற்கு வரும், இதுவரை ஊடகங்களில் வெளிவராத மக்கள் விரோத செயல்கள் நிறைய உள்ளன. மேற்கூறிய பதிவு ஒரு உதாரணம் மட்டுமே.

மேற்கூறிய பதிவை நீங்கள் சார்ந்துள்ள கட்சி சார்பில்லாமல் படிக்கவும். அப்போது உண்மைநிலை புரியும்.

நன்றி, இளையதலைமுறை

Related Articles

Back to top button
Close
Close