fbpx
Others

விருதுநகரில் நடந்தது என்ன ? கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்…

 

ஆட்சியர் அலுவலகம்விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள், புகார் மனுவுக்கான ரசீதுகேட்டு கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து கலெக்டர்அலுவலகஅதிகாரிகளிடம் கேட்டோம். “விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில், நிலம்தொடர்பானபிரச்னைகளுக்கான‌குறைதீர்கூட்டம்நேற்றுநடைபெற்றது.இந்தகூட்டத்திற்குமாவட்டம்முழுவதிலும்பல்வேறுபகுதிகளில்இருந்துஆயிரக்கணக்கானபொதுமக்கள்வந்துகுவிந்தனர்.இந்தநிலையில்,மாவட்டஆட்சியர்அலுவலகத்தில்வருவாய்த்துறைஊழியர்கள்சார்பில்பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திபணிபுறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்றது. இதனால் நிலம் தொடர்பான மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களை பரிசீலிக்க போதுமான‌ அலுவலர்கள் பணியில் இல்லை என கூறப்படுகிறது.வருவாயத்துறை தாசில்தார்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல பணிநிலை அலுவலர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் குறைதீர்கூட்டம் தெளிவான முன்னேற்பாடின்றி நடைபெறுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, குறைதீர் கூட்டத்தில் பெற்ற மனுக்களை, முறையாக பதிவு செய்து ரசீது வழங்கிட சொற்ப அளவிலான அலுவலர்களே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால், கூட்டத்தில் பெற்ற மனுக்களுக்கான ரசீதை மாலை 6 மணி ஆகியும் கூட பொதுமக்களுக்கு, அலுவலர்களால் வழங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், புகார் மனுக்களுக்கான ரசீதை பெறாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடும் மழைகுறுக்கிட்டது. எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மழையையும்சாலைமறியல் பொருட்படுத்தாமல்ரசீதுகேட்டு  அலுவலகவளாகத்தில்கோஷமிட்டனர்.   இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, பாதுகாப்புக்காக போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வருவாய் துறை அலுவலர்கள் மற்றும்போலீஸ்தலைமையிலான குழு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே உள்ள மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். புகார் மனுக்களுக்கான‌ ரசீது வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.” என்றுதெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close