ராணிப்பேட்டை — ஆற்காடு-அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு..
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு: தகவல் தெரிந்தால் ஆற்காடுகாவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, விபத்தில் காயமடைந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பூங்கோடு கிராமம் அருகே சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்பு காயங்களுடன் கிடந்த அவரை, பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 3ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்தால், ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.உதவி ஆய்வாளர் சஞ்சீவிராயன்தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பர்:- 9498100380