மின்ஒயர் அறுந்து கீழே விழும் நிலை…….அச்சத்தில் பொதுமக்கள்…
அச்சத்தில் பொதுமக்கள் கண்டுகொள்ளாத இராணிப்பேட்டை நகராட்சி ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை நகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்டபாலு தியேட்டர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகள் ஒரு வாரம் ஆக மின்கம்பங்களில் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி காணப்படுகிறது. மற்றும் விளக்குகள் எரியாமல் இருப்பதால் அதில் இருக்கும் ஒயர் அறுந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மின் விளக்குகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலு தியேட்டர் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…..மேலும் இது சம்பந்தமாக ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கைவிடுத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்குமா ? ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம்..! ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் எம். விஜயகுமார்